Courtesy: கபில்
வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரில் இருந்து நெளுக்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,
நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும் வீதியில்
நின்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணை நெளுக்குளம்
காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



