யாழ்ப்பாணம் (Jaffna) – மானிப்பாய் (Manipay) பகுதியில் வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (14.15.2024) இணுவில் வீதி (Inuvil ), மானிப்பாயில் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதுடன், வேன் ஒன்றின் கண்ணாடி தாக்கப்பட்ட நிலையில் சேதமடைந்துள்ளன.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக உடுவில் ஏ.பி.சி வீதியை சேர்ந்த ஒருவரால் இந்த
தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக செய்திகள் – கஜிந்தன்