முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக ஒருவர் உண்ணாவிரத போராட்டம்

துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக ஒருவர் உண்ணாவிரத போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக நபரொருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (11)
காலை முதல் தனது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “துணுக்காய் பிரதேச செயலகம் தனியார் முதலாளிகளிடம் இருந்து இதுவரை இலஞ்சமாக
பெற்ற அனைத்தையும் மீள கையளிக்க வேண்டும்.

பணியிட மாற்றம் 

பிரதேச செயலக ஆளுகைக்குள்ள மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.

2017ம் ஆண்டு வரட்சி நிவாரணம் வழங்கியமை தொடர்பில் அதன் தெரிவு பட்டியல்
தொடர்பிலும் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் நீதியானதும் நியாயமானதுமான
விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக ஒருவர் உண்ணாவிரத போராட்டம் | A Person In Jaffna Is On A Hunger Strike

காணிப்பினக்குகளை பாரபட்சமற்ற முறையில் தீர்க்கவேண்டும் மற்றும் காணிகள்
வழங்கப்படவேண்டும்.

கிராம அலுவலர் திருமதி கிருஸ்னரூபன் கலைச்செல்வியின் தண்டனை பணியிட மாற்றம்
தொடர்பில் வெளிப்படையான விசாரணையும் தீர்வும் வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர் கருத்து கோரிய போது அவர் கருத்துதர
மறுப்பு தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகம் 

இதேவேளை இது தொடர்பில் துணுக்காய் பிரதேச செயலாளர் ராமதாஸ் ரமேஸ்
இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “திருவாளர் கிருஸ்னரூபன் நேற்றைய தினம் (11) துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக சில
விடயங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகின்ற விடயங்கள் அனைத்தும் எனது நிர்வாக காலப்பகுதியில் இடம்
பெறவில்லை இது தொடர்பில் அவர் ஏற்கனவே ஜனாதிபதி செயலகம் ,பிரதமர் செயலகம், ஆளுநர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகம் உள்ளிட்ட தினைக்களங்களுக்கு முறைப்பாடுகளை
அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட
செயலாளருடைய புலனாய்வு பிரிவினரால் அது தொடர்பிலான ஆவணங்கள் எடுத்து
செல்லப்பட்டுள்ளது.

துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக ஒருவர் உண்ணாவிரத போராட்டம் | A Person In Jaffna Is On A Hunger Strike

இது தொடர்பாக மாவட்ட செயலாளரினால் விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன

அவர் தனது கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் செய்வது அவரின் ஜனநாயக உரிமையாக
இருந்தாலும் அது தொடர்பில் விசாரணை முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதனை நான்
கூறமுடியாது.

அவர் போராட்டம் நடாத்துகின்ற இடத்துக்கு எமது உதவி பிரதேச செயலாளர் மற்றும்
நிர்வாக உத்தியோகத்தரை அனுப்பி வைத்து அழைப்பு விடுத்திருந்தேன்.

இருப்பினும், அவர் கதைப்பதற்கு உடன்பாடில்லை நான் கதைக்க விருப்பமில்லை, அவரின் கோரிக்கைகள் தொடர்பில் மாவட்ட செயலாளரை அணுகி அவரின் வேண்டுகோளை
விரைவுபடுத்த முடியும் மேலும் இது தொடர்பிலான அறிக்கைகளை மாவட்ட செயலாளருக்கு
அனுப்பி வைத்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.