யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண்
தலைமைத்துவ குடும்பத்தின் ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் தொடர்பில் விசாரிக்க சென்ற பெண் கிராம அலுவலருடன் மது போதையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுவாயள்ளது.
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்று (29.04.2024) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவனை இழந்த குறித்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் சூழலில்
வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு…! மே நடுப் பகுதியில் கருத்துக் கணிப்பு அறிக்கை
இறைச்சி விற்பனை
இந்நிலையில் மேய்ச்சலுக்காக சென்ற குறித்த பெண்ணிற்கு சொந்தமான ஆடு ஒன்றினை
திருடி இறைச்சிக்காக சிலர் வெட்டி விற்பனை செய்தபோது கட்டைக்காட்டில்வைத்து இறைச்சி
மீட்கப்பட்க்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிஸார் ஆட்டை இறைச்சிக்காக
வெட்டிய இடத்தை அடையாளம் கண்டதோடு, சந்தேக நபர்களை தேடும் பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் அறிந்து குறித்த இடத்திற்கு சென்ற வெற்றிலைக்கேணி பெண் கிராம
அலுவலருடன் மது போதையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தகாத வார்த்தை
பிரயோகத்தில் ஈடுபட்டதாக வெற்றிலைக்கேணி பெண் கிராம அலுவலர் குற்றம்
சாட்டியுள்ளார்.
கிராம அலுவலருடன் தகாத வார்த்தைகளை பிரயோகித்த சம்பவம் குறித்து முள்ளியான்
பொலிஸ் குழுக்கழுக்கு அறிவிக்கப்பட்டு மருதங்கேணி பொலிஸ் அதிகாரியின்
கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்படுகிறது.
வடக்கில் சூடு பிடித்துள்ள தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை
யாழ். மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் கைது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |