எதிர்வரும் 09ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன போராட்டத்தில் சகல
ஆசிரியர்களையும் ஒன்றிணையுமாறு இலங்கை ஆசிரியர்
சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன். உதயரூபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) ஊடக அமையத்தில் நேற்று (06.07.2024) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த
கோரிக்கையினை அவர் முன்வைத்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஆசிரியர்கள் அதிபர்கள் கூட்டமைப்பு எமது சம்பள நிலுவையை பெறுவதற்கான
போராட்டத்தினை கடந்த 12ஆம் திகதி பாடசாலை முடிவடைந்ததன் பின்னர நாம்
ஆரம்பித்தோம்.
விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
இந்த போராட்டம் இலங்கையில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட
பாடசாலைகளிள் உள்ள ஆசிரியர்களால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டதோடு மீண்டும் 26ஆம் திகதி கொழும்பு மற்றும் ஏனைய
வலயங்களிலும் இதனை ஆரம்பித்திருந்தோம்.
இந்தப் போராட்டத்தின் போது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாரை எம்மீது வீசப்பட்டது. அதில் பல ஆசிரியர்கள்
பாதிப்படைந்திருந்தார்கள்.
இந்நிலையில், ஆசிரியர்கள் அதிபர்கள் கூட்டமைப்பு எதிர்வரும் 09ஆம் திகதி மீண்டும் ஓர் சுகயீன போராட்டத்தினை ஆரம்பிக்க இருக்கின்றோம்.
இதில் சகல ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகிய அனைவரும்
ஒன்றிணையுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.