முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹரக் கட்டாவை கொலை செய்ய திட்டமிட்டவர் வீட்டில் அடைக்கலம் பெற்ற இஷாரா

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, தற்போது கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அங்கு, கெஹல்பத்தர பத்மேவுடனான தனது உறவு பற்றிய விவரங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல்காரரான தனது முன்னாள் காதலன் மூலம் கெஹல்பத்தர பத்மேவை சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

மேலும் தான் மறைந்திருந்த இடம் குறித்து அவர் மற்றுமொரு கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நதுன் சிந்தக்க

அதாவது தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக்க என்ற ஹரக் கட்டாவை கொலை செய்ய திட்டமிடடடிருந்த நபரின் வீட்டிலேயே தான் தங்கியிருந்ததாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் நீதிமன்றுக்கு ஹரக் கட்டா அழைத்துவரப்பட்ட போது அவரை கொலை செய்ய ஊடகவியலாளர் போல் வேடமிட்டு வருகைத்தந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

ஹரக் கட்டாவை கொலை செய்ய திட்டமிட்டவர் வீட்டில் அடைக்கலம் பெற்ற இஷாரா | A Secret Backstory That Planned Days Of Escape

சந்தேக நபர், நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடகவியலாளர் போல் வேடமிட்டு, ஹரக் கட்டாவை சுட்டுக் கொல்ல முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அப்போது கைப்பற்றப்பட்டன.

மேலும் இஷாரா மித்தெனியவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்வதற்கான உதவிகளை ஊடகவியலாளர் ஒருவரின் உதவியுடன் மேற்கொண்டதாகவும் விசாரணைகளில் கூறியிருதார்.

மேலும், ஹரக் கட்டா (நதுன் சிந்தக்க விக்ரமரத்ன) தடுப்புக் காவலில் இருந்தபோது, அவரை கொலை செய்ய ஒரு திட்டம் தீட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த பின்னணியில் விசாரணையில் மேலும் பல தகவல்களை இஷாரா வெளிப்படுத்தியுள்ளார்.

கெஹல்பத்தர பத்மே, கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமாங்காவை அறிமுகப்படுத்தியதாகவும், “எப்படியாவது அவரை அந்த வேலையைச் செய்ய வைக்குமாறு” பத்மே தன்னிடம் கூறியதாகவும், அதன்படி, கொலையை தானே இயக்கியதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார்.

ஒன்றரை மாதங்கள் இலங்கையில்

கெஹல்பத்தர பத்மேவுடன் தனக்கு இருந்த நெருங்கிய உறவு காரணமாக, இந்தப் பணிக்காக எந்தப் பணத்தையும் வசூலிக்கவில்லை என்றும் இஷாரா கூறியுள்ளார்.

ஹரக் கட்டாவை கொலை செய்ய திட்டமிட்டவர் வீட்டில் அடைக்கலம் பெற்ற இஷாரா | A Secret Backstory That Planned Days Of Escape

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட அதே நாளில், பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு, வெலிபென்னவில் உள்ள ஒரு வீட்டில் தான் இரவைக் கழித்ததாகவும், மறுநாள் கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பரின் மதுகம ஷானுக்குச் சொந்தமான தொடங்கொடவில் உள்ள ஒரு வீட்டில் ஒன்றரை மாதங்கள் தங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் ஏப்ரல் 13 ஆம் திகதி தொடங்கொடவிலிருந்து மித்தேனிய பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

குறித்த நாட்கள் புத்தாண்டு காலம் என்பதாலும், காவல்துறை அதிகாரிகள் புத்தாண்டு கடமைகளில் ஈடுபட்டிருந்ததாலும் அவர்கள் அந்த திகதியைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெலிபென்னவில் மறைந்திருந்த நாட்கள்

அங்கு தங்கியிருந்த அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற மே 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்குப் செல்ல திட்டமிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹரக் கட்டாவை கொலை செய்ய திட்டமிட்டவர் வீட்டில் அடைக்கலம் பெற்ற இஷாரா | A Secret Backstory That Planned Days Of Escape

அந்த நாட்களில் தான் எவ்வித தொலைபேசிகளையும் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இஷாரா செவ்வந்தி நேற்று மதுகம பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் தங்கியிருந்த மித்தெனியவில் உள்ள அவர் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த பின்னணியில் அவர் தங்கியிருந்த வெலிபென்ன வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மருமகனும், அளுத்கம காவல்துறையில் பணியாற்றும் ஒரு கான்ஸ்டபளும் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடங்கொட வீட்டில் தங்குமிடம் வழங்கிய நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர், மேலும் மித்தெனிய பகுதியில் உள்ள வீட்டில் தங்குமிடம் வழங்கிய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.