முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு பகுதியில் கடை தீக்கிரை: தீவிர விசாரணையில் காவல்துறை

முல்லைத்தீவு (Mullaitivu) – சிலாவத்தை பகுதியில் பலசரக்கு கடை ஒன்று தீப்பற்றி எரிந்ததையடுத்து முற்றாக சேதமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (08.10.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன் இருந்த களஞ்சியசாலை ஒன்றும் தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

அரச பேருந்து சாரதி

இதன்போது குறித்த வீதிவழியாக சென்ற அரச பேருந்து சாரதி, நடத்துனர் இதனை அவதானித்து அயல்வீட்டினரின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியில் கடை தீக்கிரை: தீவிர விசாரணையில் காவல்துறை | A Shop In Silawattai Was Burnt Down

இருப்பினும் கடையில் உள்ள பல இலட்சமான பொருட்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளது.

இது திட்டமிட்ட செயற்பாடா அல்லது மின்னினால் ஏற்பட்ட தீயா என பல கோணங்களில் முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு மின்சார சபையினர், தடயவியல் காவல்துறையினர் இணைந்து மேலதிக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இதன் போது காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்