முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் மைதானத்திற்குள் வாள்வெட்டு : தாக்குதலாளிகள் மடக்கிப் பிடிப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்றின் வாள் வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (15) இடம்பெற்ற தாக்குதலில் மீசாலை பகுதியை சேர்ந்த சிவகுமார் ராகுலன் என்ற 25 வயது இளைஞனே வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில்  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வன்முறை கும்பலில் நான்கு பேரை ஊரவர்கள் மடக்கி பிடித்து, நையப்புடைத்து, மின் கம்பங்களில் கட்டி வைத்திருந்த நிலையில், கொடிகாமம் காவல்துறையினர் தாக்குதலாளிகளை மீட்டு கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

12 பேர் கொண்ட வன்முறைக் கும்பல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொடிகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விளையாட்டுக் கழகம் ஒன்றினால் கரப்பந்தாட்ட சுற்று போட்டி ஒன்று நடத்தப்பட்டு வந்த நிலையில் அதன் இறுதி போட்டி நேற்றைய தினம் (15.06.2024) நடைபெறவிருந்தது.

யாழில் மைதானத்திற்குள் வாள்வெட்டு : தாக்குதலாளிகள் மடக்கிப் பிடிப்பு | A Youth Seriously Injured In A Sword Attack Jaffna

அதற்கான ஏற்பாடுகளை கழக உறுப்பினர்கள், தமது மைதானத்தில் செய்து கொண்டிருந்த வேளை 12 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்று, மைதானத்திற்குள் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்து, ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது.

அதன் போது இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், ஊரவர்கள் ஒன்று திரண்டு தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முயன்ற போது, அனைவரும் தப்பியோடியுள்ளனர்.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம்

அவர்களை துரத்தி சென்று, நான்கு பேரை மடக்கி பிடித்து நையப்புடைத்த பின்னர் மின் கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த கொடிகாமம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த நால்வரையும் மீட்டு , அவர்களை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

யாழில் மைதானத்திற்குள் வாள்வெட்டு : தாக்குதலாளிகள் மடக்கிப் பிடிப்பு | A Youth Seriously Injured In A Sword Attack Jaffna

ஏனைய தாக்குதலாளிகளையும் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கைதானவர்களை இன்றையதினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.