நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அப்துல் வஸீத்தை நியமிக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு விரைவில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஏறாவூர் நகர சபைக்கான உள்ளூராட்சித் தேர்தலில்
போட்டியிடுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற
உறுப்பினர் முகமது சாலி நளீம் மார்ச் 14ஆம் திகதியன்று தனது பதவியில் இருந்து
விலகினார்.

அப்துல் வஸீத்
இதனையடுத்தே, அவரின் இடத்தே அப்துல் வஸீத் நியமிக்கப்படவுள்ளார்.

