கொழும்பு – புத்தளம் வீதியில் லுணுவில சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் ஒன்று வீதியில் பயணித்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
விபத்தில் படுகாயமடைந்தவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

