புல்மோட்டையிலிருந்து திருகோணமலை (Trincomalee) நோக்கி பயணித்த வான் ஒன்று இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளதாக நிலாவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோசமான வானிலை
மோசமான வானிலை காரணமாக வான் இரண்டு கார்களை முந்திச் செல்லச் சென்ற போது எதிர்திசையில் மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றமையினால் விபத்தைத் தவிர்ப்பதற்காக வானை சாரதி இடது பக்கம் திருப்பி முச்சக்கர வண்டியுடன் மோதியதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி முன்னால் சென்ற முச்சக்கரவண்டியின் மீது மோதியுள்ளதாக காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.