முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அனுமதிக்கப்படாத நெல் கொள்வனவு உபகரண பயன்பாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை
நடவடிக்கையின் போது அனுமதிக்கப்படாத முத்திரையிடாத நிறுவை, அளவை உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளதாக மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும்
சேவைகள் தினைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது
அனுமதிக்கப்படாத நிறுவை அளவை உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜஸ்டினா முரளிதரனின்
பணிப்புரைக்கு அமைவாக வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, பிரதேச செயலாளர்
பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அனுமதிக்கப்படாத 10
நிறுவை அளவை உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சோதனை நடவடிக்கை 

வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தற்போது
நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

அனுமதிக்கப்படாத நெல் கொள்வனவு உபகரண பயன்பாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Action On Unauthorized Paddy Procurement Equipment

இந்நிலையில் 110 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட
சோதனை நடவடிக்கையின் போது அனுமதிக்கப்படாத 10 நிறுவை அளவை உபகரணங்களும், 4
முத்திரையிடாத நிறுவை அளவை உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், நிறுவை
அளவைக்கு அனுமதிக்கப்பட்ட 43 நிறுவை அளவை உபகரணங்களும் காணப்பட்டதாக அலகுகள்
நியமங்கள் மற்றும் சேவைகள் தினைக்கள மாவட்ட ஆய்வுகூட நிலைய பொறுப்பதிகாரி வீ
.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அனுமதிக்கப்படாத நெல் கொள்வனவு உபகரண பயன்பாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Action On Unauthorized Paddy Procurement Equipment

பறிமுதல் செய்யப்பட்ட அளவை உபகரணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா
முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன்
கைப்பற்றப்பட்ட நிறுவை அளவை உபகரணங்களை அளவீட்டு அலகுகளும் நியமங்களும்
சேவைகளும் சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மற்றும்
களுவாஞ்சிகுடி ஆகிய மாவட்ட நீதிமன்றத்திற்கு சட்ட நடவடிக்கைகளுக்காக
ஒப்படைக்கபடவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.