சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
அதிகப்படியான உயரம், அதற்கு தயாராக இருக்கிறேன்.. நடிகை குஷ்பூ மகள் வருத்தம்
இந்த தேதியா
அமரன் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், மதராஸி படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ‘மதராஸி’ படத்தை வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேதியில் தான் கடந்த ஆண்டு விஜய் நடித்த GOAT திரைப்படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.