விஜய்
நடிகர் விஜய், தமிழ் சினிமா ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.
இவரது படம் என்றாலே மாஸ் தான் என்பது ரசிகர்களின் எண்ணம். இவர் தற்போது தனது 69வது படத்தில் நடிக்கிறார், இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பது அவரை தாண்டி அவரது ரசிகர்களுக்கு பெரிய வருத்தமாக உள்ளது.
எச். வினோத் இயக்கும் விஜய்யின் கடைசி படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு வேலைகளும் தொடங்கி இருக்கிறது.
நடிகர் டீஜே
தற்போது விஜய்யின் 69வது படத்தில் அசுரன் பட புகழ் டீஜே கமிட்டாகியுள்ளாராம். மமிதா பைஜுவிற்கு ஜோடியாக தான் நடிக்க இருக்கிறாராம். விஜய்யின் கடைசி படம், இந்த வாய்ப்பை எப்படி தவறவிட முடியும்.
சிறுவயதில் இருந்தே அவரது படத்தை பார்த்து வளர்ந்தவன் தான், அவருடன் பணிபுரிவது சந்தோஷம் என கூறியுள்ளார்.
முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த பிரச்சனை, யாரு அவங்க.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ