இலங்கையின் முன்னணி நடிகை மாலினி பொன்சேகா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
நிலையில், தற்போது நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாலினி பொன்சேகாவின் சகோதரி தமயந்தி பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு
மாலினி அண்மையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது நலமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளார்.
மாலினி பொன்சேகாவின் உடல்நலக் குறைவு குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள்
பரவி வருவதை தொடர்ந்தே, நடிகை தமயந்தி பொன்சேகா, இந்த தகவல்களை
வெளியிட்டுள்ளார்.