கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை. இயக்குவதற்கு இலங்கை
துறைமுக ஆணையகத்துடன் கூட்டு சேர முக்கிய கப்பல் நிறுவனங்கள் ஆர்வம்
தெரிவித்துள்ளன.
ஆனால் இந்தியாவின் அதானி நடத்தும் மேற்கு கொள்கலன் முனையத்துடனான ஒப்பந்தம்,
இதற்கு தடையாக உள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
அதானி ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் திகதிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு அல்லது
துறைமுகத்தின் மொத்த செயல்திறன் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு 5.5 மில்லியன்
அலகுகளை தாண்டும் வரை, கொழும்பு துறைமுகத்தில், எந்தவொரு புதிய வசதிகளையும்
இயக்க மூன்றாம் தரப்பினரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இலங்கை துறைமுக
ஆணையகம் அனுமதிப்பதை இந்த ஒப்பந்தம் தடுக்கிறது.
இந்தநிலையில் குறித்த ஒப்பந்தத்தின்படி, துறைமுக அதிகாரசபையும் அரசாங்கமும்
கிழக்கு கொள்கலன் முனையத்தை இயக்கமுடியும் என்ற அனுமதியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.