சுகாதார அமைச்சின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 350 விசேட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ள நிலையில், அது பல மாதங்களாக தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி 2022 முதல், சுகாதார அமைச்சின் அனுமதியின்றி 300 முதல் 350 சிறப்பு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னரும்
சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னரும் ஏழு வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மொனராகலை, மஹியங்கனை, ஹம்பாந்தோட்டை போன்ற வைத்தியசாலைகளில் பணியாற்றிய வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விசேட வைத்தியர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது, குறித்த வைத்தியர் விடுப்புக்கு முறையான அனுமதி பெற்றுள்ளாரா என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பரிசோதிக்க வேண்டும்.
நிலை தடுமாறிய ஹெலிகொப்டர் : மயிரிழையில் உயிர் தப்பிய அமித்ஷா
வீசா வழங்கும் போது சட்ட நிலைமையை பரிசோதிக்க வேண்டும் என்றாலும் நாட்டை விட்டு வெளியேறிய சில விசேட வைத்தியர்கள் சுகாதார அமைச்சின் சட்ட அங்கீகாரம் இன்றியும் தேவைக்கேற்ப விடுமுறை அனுமதி பெறாமலும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எடுக்கப்படாத ஒழுக்காற்று நடவடிக்கை
வெளிநாடுகளுக்குச் சென்ற விசேட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அதிபர் சந்திரிக்கா விடுத்த சூளுரை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |