புதிய இணைப்பு
எதிர்வரும் கச்சதீவு பெருவிழாவுக்கான ஒத்துழைப்பை சகல பக்தர்களும் வழங்க
வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்
மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து துறைசார் தரப்பினருடன் மேற்கொண்ட
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்தத் தெரிவித்தபோதே மாவட்ட பதில்
செயலாளர் இதனை தெரிவித்தார்.
மேலும் எங்களால் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கச்சதீவில் சமர்ப்பிப்பதன்
மூலம் தமது பதிவுகளை பக்தர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.
இதேநேரம் பேருந்து போக்குவரத்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை
மற்றும் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் தரப்பினருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் அதிகரித்து வரும் தென்னை மரங்களின் மீதான வெள்ளை ஈயின் தாக்கம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (6) இடம்பெற்ற விவசாய குழு கூட்டத்தின் போதே இந்த விடயம் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, யாழில் அதிகரித்து வரும் வெள்ளை ஈயின் தாக்கம் தென்னைகளை அதிகளவில் பாதிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
இந்த நிலையில் மருந்துகளை விசிறி அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தென்னை பயிர்ச் செய்கை சபை தெரிவித்திருந்தது.
மேலும், வீதிகளை அமைக்கும் போது கமநல சேவைகள் விவசாய குழுக்களின் கருத்துக்களை கேட்டு அவற்றை செய்ய வேண்டும் என்ற விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் எட்டப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலர்கள், திணைகள் அதிகாரிகள், விவசாய பணிப்பாளர்கள், மாவட்ட விவசாய திணைக்களத்தினர், துறை சார்ந்தவர்கள், கமநல சேவை பிரிவினை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.