ஏர் அஸ்தானா(Air Astana )விமான நிறுவனம் 2024/2025 குளிர்காலத்தை ஒட்டி இலங்கைக்கான (sri lanka) நேரடி விமான சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
அதன் தொடக்க விமானம் நேற்று (16)திங்கட்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது.
விமானமும், பயணிகளும் வரவேற்பு
விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் சேவீசஸ் (இலங்கை) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் வந்திறங்கிய முதல் விமானம் நீர் பீரங்கி வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சியுடன் பயணிகள் மற்றும் பணியாளர்களும் வரவேற்கப்பட்டனர்.
வாராந்தம் விமானசேவை
இந்த முதல் விமானத்தில் 150 பயணிகளும் 08 ஊழியர்களும் இருந்தனர்.
இந்த விமானங்கள் ஒவ்வொரு வாரமும் 04 நாட்களில் கஸகஸ்தானின் அல்மாட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.