வெடிகுண்டு மிரட்டலை ஒன்று காரணமாக மும்பையில் இருந்து நியூயார்க்கிற்குச் சென்ற எயார் இந்தியா விமானம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, 19 பணியாளர்கள் உட்பட 322 பேரை ஏற்றிச் சென்ற போயிங் 777-300 ER விமானம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமானத்தின் கழிப்பறைகளில் ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான குறிப்பொன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த உடன் நடடிவடிக்கையை விமானக் குழுவினர் எடுத்துள்ளனர்.
பாதுகாப்பு சோதனை
அதன்போது, விமானிகள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிகளுடன் விரைவாக ஒருங்கிணைந்து மும்பைக்கு பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு நிறுவனங்கள் இப்போது விமானத்தை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றன, மேலும் பயணிகள் தேவையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
தொடர்ச்சியான மிரட்டல்கள்
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அச்சுறுத்தலின் தன்மை மற்றும் குறிப்பின் தோற்றம் பற்றிய விவரங்கள் வெளியிடப்படாமல் உள்ளன.
2024 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் பல விமானங்களை குறிவைத்து தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன, இது இந்திய விமானப் போக்குவரத்துத் துறைக்குள் எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளது.