குட் பேட் அக்லி
நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர்கள் பிரபலங்களிலும் உள்ளார்கள். அப்படி ஒரு ரசிகர் தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது இவர் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இது தீவிர ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளதாக படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த படத்தில் அஜித்துடன், த்ரிஷா நடித்துள்ளார், இவர்கள் இணைந்து நடிக்கம் 6வது படம் இது.
பாக்ஸ் ஆபிஸ்
பட ரிலீஸிற்காக அதிகம் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அந்த நாளும் வந்துவிட்டது.
வெளிநாட்டில் குட் பேட் அக்லி முதல் நாள் வசூல்.. எவ்வளவு வரும் தெரியுமா
படத்தை கொண்டாடிய ரசிகர்கள் இப்போது படம் எவ்வளவு வசூலிக்கப்போகிறது என்பதை காண ஆவலாக உள்ளனர். முதல் நாளில் மட்டுமே சென்னையில் இப்படம் ரூ. 2.5 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
அதேபோல் தமிழகத்தில் இப்படம் மொத்தமாக ரூ. 35 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.