முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணி சுவீகரிப்பு: மக்களின் கடும் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்கு வழங்குவதற்கு நான்காவது தடவையாகவும் எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று (02) தடுத்து நிறுத்தப்பட்டது.

குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர், கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் உள்ளிட்டவர்கள் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூட்டு எச்சங்கள்: இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானம்

புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூட்டு எச்சங்கள்: இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானம்

மகஜர் கையளிப்பு 

அத்துடன் குறித்த காணியினை அளவீடு செய்து, இராணுவத்திற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்க முடியாதென அப்பகுதி மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் அங்கு வருகைதந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணி சுவீகரிப்பு: மக்களின் கடும் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தம் | Alampil Maveerar Thuyilumilla Land Acquisition

அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் அதிகளவிலான காவல்துறையினரின் பிரசன்னம் இருந்தததாக தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியினை தற்போது சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இலங்கை பக்கம் திரும்பிய இஸ்ரேலின் பார்வை: ஈரான் அதிபரின் விஜயத்திற்கு எதிர்ப்பு

இலங்கை பக்கம் திரும்பிய இஸ்ரேலின் பார்வை: ஈரான் அதிபரின் விஜயத்திற்கு எதிர்ப்பு

மக்களின் எதிர்ப்பு 

இதனால்
துயிலுமில்லக் காணியின் வெளிப்புறத்திலேயே வருடா வருடம் மாவீரர் நாளில் உறவுகளால் அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணி சுவீகரிப்பு: மக்களின் கடும் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தம் | Alampil Maveerar Thuyilumilla Land Acquisition

இவ்வாறான சூழலில் கடந்த வருடம் குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் விடுவிக்க வலியுறுத்தி மாவீரர்களின் உறவுகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதியும் அளவீட்டு பணிக்காக வருகைதந்த போது எதிர்ப்பினை வெளியிட்ட பின்னர் அங்கிருந்து சென்றிருந்தனர்.

இதற்கு முன்னரும் பலதடவைகள் நில அளவைத் திணைக்களத்தினர் இவ்வாறு நில அளவீட்டு முயற்சியில் ஈடுபட்டபோதும் மக்கள் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

என்னைக் கொலை செய்ய சதித்திட்டம்: ரொசான் ரணசிங்க சுட்டிக்காட்டு

என்னைக் கொலை செய்ய சதித்திட்டம்: ரொசான் ரணசிங்க சுட்டிக்காட்டு

மக்களை அச்சுறுத்தும் காவல்துறையினர் 

அளம்பில் பகுதியில் குமுழமுனை செல்லும் பிரதான வீதியின் ஒரு புறத்தில் உள்ள அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினையும் (தனியார் காணியினையும்) மற்றைய புறத்தில் தென்னைப் பயிர்ச்செய்கை சபைக் காணியினையும் சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்காக 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் கையகப்படுத்தியிருந்தனர்.

அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணி சுவீகரிப்பு: மக்களின் கடும் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தம் | Alampil Maveerar Thuyilumilla Land Acquisition

இதன் பின்னர்
தென்னைப் பயிர்ச்செய்கை சபைக் காணியினை நிரந்தரமாக கையகப்படுத்தியுள்ள நிலையில் துயிலுமில்லக் காணியில் இராணுவத்தினர் உணவகம் ஒன்றை மாத்திரமே தற்போது வைத்திருக்கின்றனர்

இந்த நிலையில் இந்தக் காணியினை உயிரிழந்த தமது உறவுகளினை நிம்மதியாக நினைவுகூர தருமாறு மக்கள் பலதடவை கோரியும் இராணுவம் இவ்வாறு தொடர்ச்சியாக அபகரிக்க முயன்றுவரும் நிலையில் மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக இன்று இராணுவத்துக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு துணையாக முல்லைத்தீவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததோடு மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்ப்பாடுகளிலும் ஈடுபட்டிருந்த நிலையில் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.