தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது பட்டம் மற்றும் தமது கல்விச்சான்றிதழ்களை சமர்பித்து தங்களை உத்தமர்கள் என நிரூபித்து காட்டவேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(Govinthan Karunakaran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று(22.12.2024) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்குவரும் போது தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பட்டப்படிப்பு பெற்றவர்கள், கல்வியாளர்கள்.
எம்பிக்களின் கல்வி தகைமை
கடந்த அரசாங்கம் போல் அல்லாமல் நாங்கள் கல்வி மான்களை உள்ளடக்கியவர்கள் என்ற ரீதியில் ஆட்சிக்கு வந்தவர்களின் பட்டப்படிப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையில் துரஷ்டவசமாக சபாநாயகர் இராஜனாமா செய்துள்ளார்.
நாட்டில் சில வேளைகளில் கலாநிதிபட்டங்கள் பணம் கொடுத்து பல்கலைக்கழகங்களில் பெறப்படுவது வழமையாக இருக்கின்றது.
அது அரசியல்வாதிகள் மாத்திரமல்ல அதிகாரிகளும் கூட கலாநிதி பட்டங்களை பணம் கொடுத்து பெற்றுள்ளதாக அறியகூடியதாக உள்ளது.
அந்தவகையில் வெளிநாடுகளில் பட்டம்பெற்று இன்று நாங்கள் படித்தவர்கள் என கூறிக் கொண்டு தங்களது பட்டங்களை தங்களுடைய பெயருக்கு பின்னால் வைத்திருப்பவர்கள் அதை நிரூபிக்க வேண்டிய காலக்கட்டமாக இருக்கின்றது.
உள்நாட்டிலே பட்டம் எடுத்தவர்களின் பட்டப்படிப்புக்கள் தற்போது கேள்விக்குட்படுத்தப்படுவதாக தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளிலே பட்டம் பெற்றவர்களது பட்டம் கேள்விக்குள்ளாக்படுகின்றது.
எனவே கடந்த காலத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை படிக்காதவன் முட்டாள், நான்படித்தவன் பட்டங்கள் இருக்கின்றது என வீரவசனங்கள் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் தமது கல்விச்சான்றிதழ்களை சமார்ப்பித்து தங்களை உத்தமர்கள் என காட்டவேண்டும்”என அவர் கூறியுள்ளார்.