யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபை செயலாளருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களால் குறித்த குற்றச்சாட்டுகள் இன்று(24) முன்னவக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை நகரசபையின் விசேட அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் அதனை தெரிவித்துள்ளனர்.
புதிய சந்தைக்கு காணி
அதன்போது, குறிப்பாக பருத்தித்துறை மரக்கறி சந்தை புதிய சந்தை தொகுதியிலிருந்து மீண்டும்
நவீன சந்தை தொகுதிக்கு மாற்றப்பட்டிருந்தபோதும் அங்கு வரி அறவிடப்படாமை, புதிய
சந்தைக்கு காணி கொள்வனவில் மோசடிகள் ஏற்ப்பட்டதாகவும் இங்கு
சுட்டிக்காட்டபட்டிருந்தது.


