தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில்
ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உண்மையான விடயங்கள்
தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகவும் தனியார் வர்த்தக நிறுவனமொன்றின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்றதாக பாரவூர்தி ஒன்றை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளரே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன்
இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தான் ஒன்றை முறைப்பாடு
பதிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
விபத்தை ஏற்படுத்தும் வகை
அவர் மேலும்
தெரிவிக்கையில், “நாங்கள் 65 வருட காலமாக கட்டடப் பொருள் வியாபாரத்தை நாம் செய்து வருகிறோம்.
இவ்வாறான நிலையில் எமது நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் சுண்ணக் கற்களை
திருகோணமலைக்கு கொண்டு செல்லும் வழியில் சாவகச்சேரியில், இளங்குமரன் வீதியின் குறுக்காக தனது வாகனத்தை நிறுத்தி
மறித்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்தும் வகையில் தனது வாகனத்தை எமது வாகனத்துக்கு முன்னால்,
பிரதான வீதியில் நிறுத்தி சாரதியை மிரட்டி வாகன திறப்பை வாங்கியமை
சட்டத்துக்கு விரோதமான செயற்பாடு.
1992 ஆம் ஆண்டு 33 இலக்க சட்டத்தின் 28 (1)( 2) பிரிவுகளின் பிரகாரம் எமது
வாகனம் சுண்ணக் கற்களை எடுத்துச் சென்றது.
முதலாவது பிரிவானது கனியவளங்களை
அகழ்வதற்கான அனுமதி, எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதிப்பத்திரம் என்பவற்றை
பற்றி கூறுகிறது.
அதன் பிரகாரமே கல் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது” என்றார்.
தொடர்புடைய செய்தி –