பெருவெள்ளத்தால் அவலப்பட்ட இலங்கை இனி அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் மிசனுக்கு ஒரு முக்கிய மையமாக மாறப்போவதற்குரிய கட்டியங்கள் கச்சிதமாகவே தெரிகின்றன.
அமெரிக்காவின் முக்கிய ராஜதந்திரியான அலிசன் கூக்கர் (Allison Hooker) இலங்கைக்கு சென்று அநுரவுடன் பேசிய பின்னர்
அமெரிக்க படையினர் தங்கியுள்ள கட்டுநாயக்கவில் விமானப்படை தளத்துக்கும் சென்று திரும்பினார்.
அமெரிக்காவை பொறுத்தவரை அதன் மொன்டானா தேசிய காவல்படைக்கு சிறிலங்கா படைத்துறைக்கும் இடையில் ஒரு இரகசிய பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குள் அமெரிக்க படையினர் இலங்கையில் களமிறங்கவேண்டிய நிலையை டித்வா சூறாவளி சடுதியாக உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த சடுதி களமிறக்கம் இப்போது சீன அரசாங்கத்தின் மூன்றாவது உயர் முகமான ஜாவோ லெஜியை (Zhao Leji) எதிர்வரும் 23 அன்று இரண்டுநாள் பயணமாக கொழும்புக்கு பறக்கவைக்கிறது.
ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து அதன் கடல்சார் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் முகமது ஜனைத் அன்வர் இலங்கைக்கு சென்று இலங்கையில் நிலைகொண்டுள்ள பாகிஸ்தானிய மீட்புக் குழுக்களையும் சந்தித்திருக்கிறார்.
ஆனால் இந்தியா இலங்கைக்கு அதிக உதவிகளை வழங்கினாலும் அங்கிருந்து இதுவரை உயர் முகங்கள் இலங்கைக்கு செல்லவில்லை. இப்போதைக்கு எல்லாவற்றையும் கொழும்பில் உள்ள அதன் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தான் பார்த்துக்கொள்கிறார்.
இப்போது மலைச்சரிவு, மண்சரிவு போன்ற பேரவலத்தின் பின்னர்
மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவது குறித்த குரல்கள் வந்தவுடனேயே அவர்களை வட மாகாணத்தில் மாத்திரம் குடியேற்றுங்கள் கிழக்கில் வேண்டாம் என முஸ்லிம் கடும்போக்கு குரல்கள் ஒலிக்கும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு…..
https://www.youtube.com/embed/e8wjJEzD1xc

