முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அடுத்த ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

2025 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, கற்றல் உபகரணங்கள் கொள்வனவிற்காக பாடசாலை மாணவர்களிற்கு கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பாடசாலை மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கங்களை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

எதிர்மறையான தாக்கங்கள்

இதனூடாக பாடசாலைக் கல்விற்காக பெற்றோரினால் சுமக்கப்படும் செலவுகளிற்கு நிவாரணமளித்து அதனூடாக பாடசாலைப் மாணவர்களின் கல்வியைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதினூடாக அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது அரசின் நம்பிக்கை என தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு | Allowance For School Students

இதேவேளை பொருளாதார நெருக்கடியின் பாதகமான முடிவுகளால் மாணவர்களின் கல்வியில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் நிகழ்த்திய “Household Survey on Impact of Economic Crisis – 2023″ தரவுக் கணக்கெடுப்பின் பிரகாரம் தெளிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் இச் சதவீதம் அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிவதாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களில் 53.2 சதவீதமானோர் பாடசாலை கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதை குறைத்து அல்லது நிறுத்தியுள்ளதுடன், 26.1 சதவீதமானோர் முன்னர் பயன்படுத்திய பாடசாலைகற்றல் உபகரணங்களை மீளப் பயன்படுத்துவதிற்கும் எண்ணியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

நிதி ஒதுக்கீடு

இதன்படி, பாடசாலைக் கல்வி பெறுகின்ற அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களின் மாணவர்களிற்காக ஒரு மாணவனுக்கு 6,000 ரூபா கற்றல் உபகரணங்கள் கொள்வனவுக்கான கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு வேறாக்கப்பட்டுள்ளதுடன் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் செலுத்துவதற்கு திறைசேரி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

அடுத்த ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு | Allowance For School Students

மேலும், ஏனைய பாடசாலைப் மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கு ஒரு மாணவர்களுக்கு தலா 6000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கொடுப்பனவிற்கான நிதி ஒதுக்கீடு கல்வி உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.     

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.