அமெரிக்க யுஎஸ்எய்ட் அமைப்பால், இதுவரை நிதியளிக்கப்பட்ட குறைந்தபட்சம் 10
அரசு திட்டங்களுக்கு மாற்று நிதியுதவியை இலங்கை அரசாங்கம் பரிசீலித்து
வருகிறது.
வெளிநாட்டு உதவியை முடக்குவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கையினால்,
இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
யுஎஸ்எய்ட்டின் நிதி முடக்கம், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை கணிசமாக
பாதித்துள்ளது என்று நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
யுஎஸ்எய்ட்டின் உதவி
முடக்கப்பட்ட நேரத்தில், USAID நிதிகள், நீதி மற்றும் நிதி அமைச்சகங்களின்
ஐந்து திட்டங்களுக்கும், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இரண்டு திட்டங்களுக்கும்
வழங்கப்பட்டு வந்தன.
2019 முதல் இதுவரை 233.4 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள அரசு
திட்டங்களுக்கு யுஎஸ்எய்ட் உதவியுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.