2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு
சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வரிச் சலுகைகளை மேம்படுத்துதல், ஒழுங்குமுறை மேற்பார்வையைச்
செம்மைப்படுத்துதல் மற்றும் நிறுவன மறுசீரமைப்பை அமுல்படுத்துதல் ஆகியவற்றை
இந்தத் திருத்தங்கள் நோக்கமாக கொண்டுள்ளன.
இந்த ஒப்புதல்கள் கடந்த ஜூலை 7 ஆம் மற்றும் ஒக்டோபர் 13 ஆம் திகதிகளில் நடந்த
அமைச்சரவைக் கூட்டங்களில் வழங்கப்பட்டன.

சட்டமூல வரைவு
சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூல வரைவு, சட்டமா அதிபரின் அனுமதிக்குப்
பிறகு, அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தின்
ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர், திட்ட அமுலாக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற
வகையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானம், கொழும்பு துறைமுக
நகரத்தை நிர்வகிக்கும் சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்துவதில்
அரசாங்கத்தின் கவனத்தை பிரதிபலிக்கின்றது.

