அமெரிக்காவில் (USA) மன ஆறுதலுக்காக 7 புலிகளை வளர்த்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கைது நடவடிக்கை லாஸ் வேகாஸ் அருகே உள்ள பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கார்ல் மிட்சல் என்னும் 71 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திடீர் சோதனை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மிட்சலின் வீட்டில் புலிகள் வளர்க்கப்படுவதை அறிந்த அதிகாரிகள் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது புலிகள் அடைக்கப்பட்ட கூண்டுகளின் சாவியை அதிகாரிகள் கேட்டபோது அதை மிட்சல் கொடுக்க மறுத்துள்ளார்.
ஏழு புலிகள்
புலிகள் தொடர்பான ஆவணங்களும் மிட்சலிடம் இல்லை.
அத்துடன், மிட்சல் தனது மன ஆறுதலுக்காகப் புலிகளை வளர்த்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மிட்சல் வீட்டில் இருந்த ஏழு புலிகளும் பாதுகாப்பாக விலங்கு நலக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அவர் புலிகளை எப்படி வாங்கினார் என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.