முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் இடம்பெற்ற கொலை : பின்னணியில் இந்திய மத்திய அமைச்சர்..!

கனடாவில்(canada) இருந்து செயல்படும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பினரைக் குறிவைக்கும் சதித்திட்டத்தில் இந்திய(india) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின்(amith shah) பங்கு இருந்தது என்ற தகவலை கனடா அதிகாரிகள் கசியவிட்டதாக வோஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தொடர்பு பற்றி வோஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் உறுதி செய்த தகவலை, தேசிய பாதுகாப்புக் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கனடா நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் கூறியிருக்கிறார்.

அமித் ஷாவின் தொடர்பு

அதாவது, “வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் என்னை அழைத்து அவர், அந்த நபர்தானா என்று கேட்டார். ஆமாம், அவர்தான் என்பதை நான் உறுதி செய்தேன்” என்று மொரிசன் தேசிய பாதுகாப்புக் குழுவிடம் கூறினார்.

கனடாவில் இடம்பெற்ற கொலை : பின்னணியில் இந்திய மத்திய அமைச்சர்..! | Amit Shah Behind Attack On Sikh Separatists Canada

ஆனால், அமித் ஷாவின் தொடர்பு பற்றி கனடா நாட்டுக்கு எப்படி தெரிய வந்தது என்னபதை மோரிசன் கூறவில்லை.

 கனடா பிரதமரின் குற்றச்சாட்டு

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதி என்று இந்தியாவால் அடையாளம் கூறப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் பங்கு இருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் கனடாவிடம் இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudea)u கடந்த ஆண்டு முதலே கூறி வந்தார்.

கனடாவில் இடம்பெற்ற கொலை : பின்னணியில் இந்திய மத்திய அமைச்சர்..! | Amit Shah Behind Attack On Sikh Separatists Canada

வெளிநாடுகளில், படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இந்திய அதிகாரிகள் மீது கனடா மட்டும் குற்றம்சாட்டவில்லை, நியுயோர்க் நகரில் வசிக்கும் சீக்கிய பிரிவினைவாதத் தலைவருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கிலும் மத்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித்துறை அண்மையில் குற்றச்சாட்டைப் பதிவு செய்திருந்தது.

கனடா பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாதலி ட்ரூயின், செவ்வாயன்று, ஆணையத்திடம் அளித்த தகவலில், கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர்களின் தகவல்களை சில அமைப்புகள் மூலம் இந்திய அரசு சேகரித்ததற்கான ஆதாரங்கள் கனடாவிடம் உள்ளது என்று கூறினார்.

 விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைக்காது 

முக்கிய ஆதாரங்களை அளித்தும், இந்திய அரசு, விசாரணைக்கு ஒத்துழைக்காது என்பது தெளிவாகத் தெரியவந்ததைத் தொடர்ந்தே, பொது வெளியில் செல்வது என்று முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கனடாவில் இடம்பெற்ற கொலை : பின்னணியில் இந்திய மத்திய அமைச்சர்..! | Amit Shah Behind Attack On Sikh Separatists Canada

மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், கனடாவில் வாழும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால்தான், இந்த வழக்கில், நடந்துகொண்டிருக்கும் விசாரணைகள் குறித்து பகிரங்கமாக பேசும் அசாதாரண நடவடிக்கையை ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை எடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் நான்கு இந்தியர்கள் நிஜ்ஜார் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்காக காத்திருக்கின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.