கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை 320000 கிலோ கிராம்
நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடபிராந்திய
பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (17.07.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை
குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், சிறுபோக அறுவடை நெல்லை விவசாயிகளிடம்
இருந்து நெல் சந்தைப்படுத்தல் சபை நிர்ணய விலைக்கு அமைய கொள்வனவு செய்கின்ற
நிலையில் வடமாகாணத்திலும் கொள்வனவிற்காக களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் நடவடிக்கை
இது
வரை 320000 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும். இந்த வருடம்
அரசாங்கத்தின் நடவடிக்கையாக ஈர நெல்லும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

சிறிய
மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பப்படிவத்தைப்பெற்று முகவராக
இணைந்து ஈர நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்து உலர வைத்து திரும்ப
ஒப்படைக்க வேண்டும் ஈர நெல்லு நாடு ஒரு கிலோ 102ரூபாவாகவும், சம்பா
-105ரூபாவாகவும், கீரிச்சம்பா 112ரூபாவாகவும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை
உரிமையாளர்கள் கொள்வனவு செய்து உலர வைத்து மீள வழங்கும் போது. கூலி மற்றும்
போக்குவரத்து கொடுப்பனவும் கிடைக்கின்றது.
எனவே சிறிய மற்றும் நடுத்தர அரிசி
ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்ள முடியும்” என
தெரிவித்துள்ளார்.

