வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோரது
மறுவாழ்விற்காக வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் (Nintavur) காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் முழு நேரமாக கல்வி கற்று வந்த அனைத்து மத்ரசா மாணவர்களுக்கும் காலநிலை சீற்றத்தின் காரணமாக கடந்த 26-11-2024 செவ்வாய்க்கிழமை மாலை விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் சம்மாந்துறை (Sammanthurai) பகுதியை சேர்ந்த மாணவர்கள் தமது பிரதேசத்திற்கு செல்லும் வழியில் காரைதீவு மாவடிப்பள்ளி (Karaitivu) பாலத்தடியில் வெள்ள அனர்த்தத்தில் அகப்பட்டு மரணமடைந்த சம்பவமானது முழு நாட்டையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
துக்கதினம் அனுஸ்டிப்பு
இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களுக்காக அம்பாறை (Ampara) மாவட்டம் நிந்தவூர், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை,பகுதிகளில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கக் கூடிய அனைத்து ஜும்ஆ
பள்ளிவாசல்களிலும் இன்றையதினம் (29.11.2024) குத்பாக்களிலும் ஷஹீதுகளுடைய அந்தஸ்து
தொடர்பாக குத்பா உரை நிகழ்த்தப்பட இருப்பதுடன் ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து
மரணமடைந்த மாணவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடாத்த ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் : – பாறுக் ஷிஹான்