முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

மன்னார் (Mannar) – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, நேற்று (05.07.2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

கம்பிகளின் மொழி பிரேம் என
அழைக்கப்படும் 42 வயதான கோபாலகிருஷ்ணன் கோகுல் பிரேம்குமார் என்ற
முன்னாள் போராளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

வைத்தியசாலையில் அனுமதி  

குறித்த நபர், நேற்றிரவு அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு | An Ex Militant Dies Mysteriously Mannar Manthai

இதன்போது, திடீரென தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என சத்தமிட்டுள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை

இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு | An Ex Militant Dies Mysteriously Mannar Manthai

மேலும், அவரின் சடலம்
தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதேவேளை, உயிரிழந்த முன்னாள் போராளி ஒரு கால் மற்றும் ஒரு கையும் இழந்தவர் என்பதுடன் பல்துறை சார் ஆளுமை மிக்கவர் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்