முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அண்ணா பல்கலையில் மாணவி வழக்கு: பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

இந்தியா (India), அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பர் குற்றவாளி என உத்தரவளிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி பிறப்பித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி தகாதமுறைக்கு உட்படுத்தியிருந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த ஞானசேகரனை கைது செய்தனர்.

அண்ணா பல்கலையில் மாணவி வழக்கு: பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு | Anna Uni Girl Abused Final Judgement

ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர்.

சிறப்பு புலனாய்வுக்குழு

இதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது.

அண்ணா பல்கலையில் மாணவி வழக்கு: பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு | Anna Uni Girl Abused Final Judgement

பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்த நிலையில், 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (28) வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளி 

இந்தநிலையில், சந்தேக நபர், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி எனவும்,
ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் மாணவி வழக்கு: பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு | Anna Uni Girl Abused Final Judgement

அத்தோடு, ஞானசேகரன் தொடர் குற்றவாளி, அவருக்கு கருணை காட்ட கூடாது என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் இரண்டாம் திகதி வழங்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்