சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் தற்போது முன்னணியில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் நடந்துள்ளது.
தொடரின் கதாநாயகன் முத்து மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
சிட்டி என்பவருடன் முத்துவிற்கும், மீனாவிற்கும் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்த நிலையில், இருவரையும் பழிவாங்க வேண்டும் என்று முத்து மீது வீண்பழியை சுமத்திவிட்டார் சிட்டி.
சூர்யாவை திருமணம் செய்ய காரணத்தை கூறிய ஜோதிகா.. அது என்ன காரணம் தெரியுமா
இதனால் ஊர் முழுவதும் முத்துவை குடித்துவிட்டு சார் ஓட்டும் நபராக பார்க்க துவங்கிவிட்டனர். ஒரு தப்பும் செய்யாத முத்துவின் காரையும் தற்போது போலீஸ் பிடித்துவிட்டது. மேலும் முத்து குடித்துவிட்டு கார் ஓட்டுகிறார் என்ற தவறாக பரவும் செய்தியை, வீட்டில் மனோஜ் கூறிவிடுகிறார்.
முத்துவை அடித்த அண்ணாமலை
இதனால் தனது மகன் முத்து மீது அதிருப்தி அடைகிறார் தந்தை அண்ணாமலை. இந்த நிலையில், அடுத்த வாரம் நடக்கவிருக்கும் காட்சிகளின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் மனோஜிடம் கோபப்படும் முத்து, அடிக்க கையோங்கிவிட்டார் அண்ணாமலை.
இதுவரை எதற்காகவும் தனது மகனை திட்டிகூட பேசாத அண்ணாமலை முதல் முறையாக முத்துவை அடித்துவிட்டார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என அடுத்த வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த காட்சியின் வீடியோ :
View this post on Instagram
View this post on Instagram