தற்போது 300,000 க்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்காக குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே அடுத்து வரும் 3 மாதங்களுக்குள் அவற்றை அச்சிட்டு வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்களுக்கான அமைச்சக ஆலோசனைக்குழுவில் கலந்து கொண்டபோது அவர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய சாரதி அனுமதிப்பத்திரம் இந்த ஆண்டு அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மில்லியன் அட்டைகள்
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான ஒரு மில்லியன் அட்டைகளைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனவே சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு அச்சிடும் இயந்திரத்தை நிறுவுமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.