வெள்ளவத்தை (Wellawatta) மற்றும் பம்பலப்பிட்டி தொடருந்து நிலையங்களுக்கு அருகில் தண்டவாளம் உடைந்ததால் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தொடருந்து திணைக்களம் (Department of Railway) தெரிவித்துள்ளது.
இதனால், அந்த தொடருந்து நிலையங்கள் வழியாக செல்லும் அனைத்து தொடருந்துகளும் தாமதமாகலாம் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
இதேவேளை, பம்பலப்பிட்டி (Bambalapitiya) காவல்துறை பிரிவில் தொடருந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (10) பிற்பகல் மருதானையிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த தொடருந்தில் இந்த நபர் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பம்பலப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.youtube.com/embed/7YPxHbpZ-AE