வரலாற்று சிறப்புமிக்க யாழ் (jaffna) நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த
மகோற்சவத்தின் இருபத்தைந்தாம் நாள் திருவிழாவான தீர்த்ததோற்சவ திருவிழா இன்று
பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் முருகப் பெருமான் தீர்த்தக்கேணியில் தீர்த்தமாடினார்.
தீர்த்தோற்சவத்தை காண பல பாகங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள்
முருகப் பெருமானை வழிபட்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
அலை கடல் என திரண்ட பக்தர்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் பெரும் திருவிழாவான இரதோற்சவம் நேற்றைய தினம் அலை கடல் என திரண்ட பக்தர்களுக்கு மத்தியில் நடைபெற்றுள்ளது.

நாளை (03) மாலை 04.45 மணியளவில் பூங்காவனம் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் (04) ஆம் திகதி வைரவர் உற்சவத்துடன் வருடாந்த மகோற்சம் இனிதே நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


