வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது.
இன்று காலை இடம்பெறவுள்ள கொடியேற்றத்துடன் மகோற்சவ பெருவிழா ஆரம்பமாக உள்ளது.
இந்தநிலையில், கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாகக் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
வருடாந்த மகோற்சவம்
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து சிறிய தேர் ஒன்றில் கொடிச்சீலை பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்து.
இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்ச நிகழ்வுகளை உங்கள் LankaSri News மற்றும் IBC Tamil News, YouTube தளத்தில் நேரலையாக காண முடியும்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் – 29.07.2025
https://www.youtube.com/embed/sdaxnp0OQWo

