யாழில் (Jaffna) எலிக்காய்ச்சல் நோய் என சந்தேகிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் 3
நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று (14) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார்.
மேலதிக சிகிச்சை
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 5 நாள் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு
உடனடியாக அன்றைய தினமே நோயின் தீவிர நிலை உணரப்பட்டு யாழ்.போதனா
வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.