உலகின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான அன்டனோவ்-124 கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தரையிறங்கியுள்ளது.
குறித்த விமானம், இன்று (28) விமானப்படை தளத்தில் வந்தடைந்ததை இலங்கை(Srilanka) விமானப்படையினர் வரவேற்றுள்ளனர்.
மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதிப்பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கையின் படையினருக்கு எம்ஐ 17 உலங்கு வானூர்தி ஒன்றை கொண்டு செல்வதற்காகவே இந்த விமானம் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகப்பெரிய சரக்கு விமானம்
2014 முதல், மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளில், இலங்கையின் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணிகளுக்காக இலங்கை ஏற்கனவே மூன்று எம்ஐ-17 உலங்குவானூர்திகளை அங்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.