முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு பின்னர் நாட்டின் எதிர்கட்சிகள் அனைத்தும் அவசரமாக ஒன்றுகூடின.
இது, உண்மையில் நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று என்ற நிலையிலேயே நடந்தேறியது.
இந்நிலையில், இந்த கைது நடவடிக்கையினால் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம், இராஜதந்திர ரீதியில் மிகப்பாரிய சவாலை எதிர்கொள்ளவுள்ளது என அரசியல் ஆய்வாளர் அருஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதற்கிடையில், வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளியேறும் போது தனது கையில் வைத்திருந்த புத்தகம் குறித்தும் அருஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில், பொரிஸ் ஜோன்ஸனின் நூலினை கையில் வைத்திருந்ததன் மூலம், அநுர அரசு எதிர்நோக்கவுள்ள சவாலை எடுத்துக் காட்டியதாக அருஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன் மூலம் சர்வதேச ரீதியில் தான் எவ்வளவு முக்கியமான இராஜதந்திரி என்பதை மீண்டும் வலியுறுத்த முற்படுவதாகவும் அருஸ் கூறியுள்ளார்.
இவ்விடயத்துடன் தொடர்புடைய பல முக்கிய கருத்துக்களை ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,

