தமது ஆட்சியில் புதிய கல்வி முறைமை ஸ்தாபிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் (Polonnaruwa) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ”பல அரசாங்கங்களை ஸ்தாபித்த நாட்டு மக்கள் தற்போது வெறுப்படைந்துள்ளனர். தேவையாயின் இந்த நாட்டைச் செல்வந்த நாடாக மாற்ற முடியும்.
புதிய வாழ்க்கை முறை
இந்த வாழ்க்கை முறைமையைவிட புதிய வாழ்க்கை முறையையே மக்கள் விரும்புகின்றனர்.
நாட்டின் எதிர்காலம் தொடர்பில் இளைஞர்கள் நம்பிக்கையின்மையுடன் உள்ளனர்.
எந்தத் தருணத்தில் இந்த நாட்டைவிட்டு வெளியேறுவோம் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் இருக்கிறார்கள்.
சகல வழிகளிலும் துன்பங்களையே மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றார்.