புதிய அரசியலமைப்பை முன்மொழியும் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக இந்தியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர் இந்த கருத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழலைக் குறைத்து, இலங்கைக்கு வர வேண்டிய, வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வரும் அரசாங்கத்தின் நோக்கம் சிறப்பானது என்றும் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தொலைநோக்கு அறிக்கை
இதற்கிடையில், இந்தியா தனது தொலைநோக்கு அறிக்கையின் கீழ், இலங்கைக்கான வளர்ச்சித் திட்டங்களை முன்மொழிந்துள்ளது.
எனினும், இந்த முன்மொழிவுகள், வெளிநாட்டு நட்பு நாடுகளுடனான உறவுகளை பாதிக்காமல் இருக்க இலங்கை அந்தத் திட்டங்களை கவனமாக வழிநடத்த வேண்டும் என்பதையும் ஒஸ்டின் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக 13வது அரசியலமைப்பு தொடர்பில் ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா வெளியிட்ட கருத்து தொடர்பில் தமிழ் தரப்பில் விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.