அரசியல் எழுச்சிக்கும், அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கும் , பல தசாப்தங்களில் இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி ஒரு முக்கிய காரணியாக இருப்பதோடு, இதில் இருந்து இலங்கை மீள்வதற்கு இரண்டு பிராந்திய சக்தி வாய்ந்த நாடுகள் – மற்றும் போட்டியாளர்களின் ஆதரவு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சீனா ஒரு காலத்தில் இலங்கையில் அதன் மிகப்பெரிய கடன்கள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகள் மூலம் ஆதிக்கம் செலுத்தும் நாடாக கருதப்பட்டது.
எனினும், சீனா நாட்டின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநராக இருந்தாலும், இலங்கையின் பொருளாதார சரிவு இந்தியாவிற்கு ஒரு உள்ளாதிக்க திறப்பை அதன் கைகளுக்கு வழங்கியது.
கடந்த மாதம் புதுடில்லியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த திசாநாயக்க, இலங்கையை “இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில்” பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.
தொடர்ந்து சீனாவுக்கு விஜயம் செய்த அவர், தங்கள் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் ஒரு வரலாற்று கட்டத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.மேலும் வரலாற்று பொருளாதார ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியுள்ளார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் நகரும் அநுர அரசாங்கத்தின் கொள்கை மற்றும் இலக்குகளை விரிவான கண்ணோட்டத்தில் ஆராயும் பொருட்டு ஜபிசி தமிழ் ஊடகமானது, அரசியல் ஆய்வாளர் அருளை நேர்காணல் செய்திருந்தது.
இதன்போது அவர் முன்வைத்த கருத்துக்களில், “ அமெரிக்க ஆதிக்க நிலையும், அநுர அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பிலும் கூறிய கருத்துக்கள் நிகழ்கால அரசியல் போக்கை எடுத்துக்காட்டியிருந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,