முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுராதபுர பெண் வைத்தியர் விவகாரம் : ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு

தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியரின் அடையாளத்தைப் பாதுகாத்து
பொறுப்புடன் செய்திகளை வெளியிடுமாறு அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல்
ஊடகங்களையும் கேட்டுக்கொள்கின்றோம் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சுதந்திர ஊடக இயக்கம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “குற்றவியல் சட்டத்தின் 365 (ஏ) பிரிவின்படி, தவறான நடத்தைக்குள்ளாகிய
குழந்தைகள் மற்றும் பெண்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவது குற்றமாகும்.

பாதுகாப்பைப் உறுதிப்படுத்த தேவையான.. 

இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கலாம்.

இத்தகைய துயரமான சம்பவங்களை ஊடகங்கள் விவரிக்கும்போது, பாதிக்கப்பட்டவரும்
அவருடைய நெருங்கியவர்களும் மேலும் மனவேதனைக்குட்படாமல் தடுப்பதற்காக ஊடக
நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அநுராதபுர பெண் வைத்தியர் விவகாரம் : ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு | Anuradhapura Female Doctor Issue

இதனை மீற முடியாத ஒரு சமூகப் பொறுப்பாக
ஊடகங்கள் ஏற்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது
தற்போது பொலிஸார் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாகும் என்பதை மீண்டும்
வலியுறுத்தும் அதேவேளை, புலன் விசாரணைகள் தடம் புரளாமல் இருப்பதை உறுதி
செய்யுமாறும், தனது பணியைச் சிறப்பாகச் செய்ததற்காக ஊடகவியலாளர்களுக்கு எதிராக
குறுகிய நோக்குடன் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் குற்ற
விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் துறையைச் சுதந்திர ஊடக இயக்கம்
கேட்டுக்கொள்கின்றது.

தரிந்து ஜயவர்தன கைது செய்யப்பட்டால், அவரது உரிமைகள் மற்றும் பாதுகாப்பைப்
உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் சுதந்திர
ஊடக இயக்கம் எச்சரிக்கின்றது.

உயர்ந்த ஊடகக் கலாசாரம்

உயர்ந்த ஊடகக் கலாசாரத்தை உருவாக்கும் எங்கள் இடையறாத போராட்டத்தை
வெற்றிப்படுத்த, இத்தகைய சூழ்நிலைகளில் பொறுப்பான ஊடகப் பயன்பாடு மிகவும்
முக்கியமானது.

அநுராதபுர பெண் வைத்தியர் விவகாரம் : ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு | Anuradhapura Female Doctor Issue

மேலும், சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவருக்கான நீதியை உறுதி
செய்வதிலும் ஊடகங்கள் தலையிடும் பொறுப்பு கொண்டிருக்க வேண்டும்.

பெண்கள் தினக் கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்டு, சம்பவத்துக்குப்
பொறுப்பானவர்களை உடனடியாகக் கைது செய்து நீதியை நிலைநாட்டுவது அனைத்து
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய ஒரு முக்கியமான நடவடிக்கையாக அமையும்
என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.