வடக்கு மாகாண முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர் (SLEAS) யோன் குயின்றேஸின் நியமனம் குறித்த ஆவணங்கள், அரச சேவை ஆனைக்குழுவின் கல்விச் சேவை குழுவிடம் இல்லை என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
யோன் குயின்றேஸின் நியமனம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் ஆணைக்குழுவால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வடக்கு மாகாண கல்வி பணிப்பாளரும் தற்போது இலங்கை கல்வி வெளியீட்டு
பிரிவின் பணிப்பாளராக கடமை ஆற்றுகின்ற ஜோன் குயின்ரஸுக்கு நியமனம் வழங்கப்பட்ட
போது இணைப்பு அடிப்படையிலேயே இவர் ஆசிரியர் கலாசாலையில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
அரசியல்வாதியின் தலையீடு
இந்நிலையில், அவருக்கு நிர்வாக சேவை நியமனம் வழங்கப்பட்ட போது பதவி உயர்வு கோர முடியாது
என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, குறித்த நியமன கடிதம்
அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டினால் கல்விச் சேவை ஆணைக்குழுவிடம் இருந்து
எடுக்கப்பட்டதாக தகவல் கசிந்த நிலையில் அந்த ஆணைகுழுவுக்கு தகவல் அறியும் சட்ட
மூலம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், SLEAS நியமனமானது, அரச சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக் குழுவினால் மாத்திரமே
வழங்கப்படுகின்ற நிலையில் ஆணைக்குழு இவ்வாறான பதில் வழங்கியுள்ளமை பல்வேறு சந்தேகங்களை
ஏற்ப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.