எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இடைமறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டிய வார்த்தை தொடர்பான தனது கருத்தை முன்வைத்தார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(06.02.2025) அமர்வில் சஜித் பிரேமதாசவிற்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்ட போது, அர்ச்சுனா அவரை இடைமறித்தார்.
உடனே, அவரின் கருத்தை கூற வாய்ப்பளிக்குமாறு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் சஜித் கோரினார்.
பிரதி சபாநாயகரின் உத்தரவு
இதனையடுத்து, பேசிய அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இன்று கூறிய தவறான வார்த்தை ஒன்றை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு கூறினார்.
மேலும், தான் நேற்று சபாநாயகரை அவமதிக்கும்படி கூறிய வார்த்தையை ஹன்சாட்டிலிருந்து நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, தயாசிறி ஜயசேகர கூறிய தவறான வார்த்தையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு பிரதி சபாநாயகர் உத்தரவிட்டார்.