முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவீரர் நாள் சைக்கிள் கட்சிக்கான ஒன்றல்ல – யாழ் மாநகர சபையில் கடும் வாக்குவாதம்

நவம்பர் 27 நினைவு நாளை கொண்டாட ஒற்றுமையாக வாருங்கள் இல்லையேல் இரு
தரப்பினருக்கும் நல்லூர் பகுதி நிலம் வழங்கப்படாது என முதல்வர் மதிவதனி
தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற நிலையில் நல்லூர் மேற்கு
வீதியில் இருக்கும் காணி நிலத்தில் நினைவேந்தல் செய்வதற்கு வழங்குவது
தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இதன்போது சைக்கிள் கட்சி மற்றும் மான் கட்சி ஆகியோர் நினைவேந்தலை குறித்த இடத்தில் நடத்துவது என்று கடும்வாதப் பிரதிவாதம் நடைபெற்றது. 

கீழ்த்தரமான நிகழ்வு

குறிப்பாக சைக்கிள் கட்சிக்கு மட்டும் நினைவேந்தல்கள் செய்யும் உரிமை
கிடையாது. அனைத்து தமிழ் தேசித கட்சிகளுக்கும் அதனை நினைவேந்த உரிமை உண்டு.

மாவீரர் நாள் சைக்கிள் கட்சிக்கான ஒன்றல்ல - யாழ் மாநகர சபையில் கடும் வாக்குவாதம் | Argument In The Jaffna Municipal Council

இதே நேரம் வருடா வருடம் சைக்கிள் கட்சி தரப்பினரே திலிபனின் நினைவு நாள்,
மாவீரர் நாள் போன்றவற்றை குத்தகைக்கு எடுத்து செய்வது போன்று அடாத்தாக
முன்னெடுக்கின்றனர்.

இதை ஏற்க முடியாது.

இந்நிலையில் குறித்த விடையத்தில் ஒற்றுமை இன்மையால் தான்
இரு பிரிவாக நிகழ்வுகள் இரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் கீழ்த்தரமான
நிகழ்வு நடக்கின்றது.

அதன்படி நினைவேந்தல் நிகழ்வை நடத்த குறித்த காணியை மான் கட்சி தரப்பினர் இம்முறை குத்தகைக்கு கோரியுள்ளனர்.  

நிகழ்வை நடத்துவது யார்

ஆனால் சைக்கிள் தரப்பினர் அதனை ஏற்க இயலாதவர்களாக குழப்பங்களை உருவாக்கி
வருகின்றனர்.

எனவே தான் சபை ஏற்கனவே இரு தரப்பினரையும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து நிகழ்வை
நடத்துவது யார் என்று முடிவை தெரிவிக்குமாறு கோரியிருந்தது.

மாவீரர் நாள் சைக்கிள் கட்சிக்கான ஒன்றல்ல - யாழ் மாநகர சபையில் கடும் வாக்குவாதம் | Argument In The Jaffna Municipal Council

ஆனால் குறித்த காலப்பகுதியில் இரு தரப்பினரும் எந்தவொரு பதிவையும் எம்முடன்
முன்னெடுக்கவில்லை.
இதனால் முடிவை சபையே எடுக்க நேரிட்டுள்ளது.

குறித்த விவாதத்தை ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி புறக்கணித்திருந்த நிலையில்
காணியை இரு தரப்புக்கும் வழங்குவதில்லை என்றும் பொது இணக்கபாட்டுடன் தேசிய
பரப்பில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்த முன்வந்தால் அதற்கு இடம்
கொடுக்கப்படும் என்றும் முதல்வரால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.